90ஸ்களில் கொடிகட்டிப்பறந்த நடிகை சுவலக்ஷ்மியா இது..? அட அவரின் நிலை என்னவென்று தெரியுமா..? இதோ வைரலாகும் புகைப்படம்..!!
சுவாலக்ஷ்மி ஒரு முன்னாள் இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் படங்களில் தோன்றினார். அவர் பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களிலும் தோன்றினார். சுவலட்சுமிபிறப்பு: ஆகத்து 19, 1977 என்பவர் கொல்கத்தாவை பிறப்பிடமாக கொண்ட வங்காள நடிகை ஆவார்.
இவர் 1994 ஆம் ஆண்டு முதல் ஆசை, கோகுலத்தில் சீதை, நிலாவே வா, நீ வருவாய் என போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் முன்னனிக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, வங்காள மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். சுவலட்சுமி 2001ஆம் ஆண்டில் விஞ்ஞானியான ஸ்வகாடோ
பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டு ஜெனீவா, சுவிட்சர்லாந்து மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நாடுகளில் வாழ்ந்துள்ளார். திரைப்படத் துறையிலிருந்து விலகியதிலிருந்த சுவலட்சுமி பிரான்சிஸ்கோவில் உள்ள கலை பல்கலைக்கழக அகாடமியியில் 2013 ஆம் ஆண்டில் இல்லஸ்ட்ரேஷனில் முதுநிலை நுண்கலைகளில் பட்டம் பெற்றார்.
திருமணத்திற்கு பின்னரும் இவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், திருமணமான பின்னர் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டார் சுவலக்ஷ்மி. தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். அவரின் ரசிகர்களுக்காக குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..